ஐபிஎல் 2026 டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி…..!

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் டெல்லியை வீழ்த்தி பெங்களூரூ அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியில் 19 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ், மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 16 ஓவரில் 75 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, 76 ரன்கள் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரூ அணி 6 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *