Advertisements

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் சாமி தரிசனம் செய்தார். நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்த அவர், அங்கிருந்து இன்று அதிகாலை சாலை மார்க்கமாக திருச்செந்தூர் வந்தடைந்தார்.
பட்டு வேட்டி, சட்டையில் வந்திருந்த விஜய், முன்னதாக கடற்கரைக்கு சென்று வழிபாடு செய்த, பின்னர் மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், வெற்றி வேல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
த.வெ.க. தலைவர் விஜயுடன் பொதுச் செயலாளர் ஆனந்த் உடன் இருந்தார். விஜய் வருகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டதால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக திருச்செந்தூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் விஜய் சாமி தரிசனம் செய்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Advertisements


