
புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் நிபா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவருக்கு நிபா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தற்போது தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் நிபா வைரஸ் வேகமாகத் தமிழகத்திலும் பரவ வாய்ப்பு உள்ளது என அச்சம் நிலவி வருகிறது.


