G. V. Prakash Kumar: ஜி வி பிரகாஷும் – திரை பயணமும்!

Advertisements

ஒரு பாரம்பரிய இசை குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து தற்போது திரையில் பிரபல பிசி இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என்கிற அடையாளங்களோடு வெற்றிகரமான முறையில் பயணித்து வருபவர் ஜி வி பிரகாஷ் குமார்.

சிறு வயதில் இருந்தே இசை கற்று கொண்டு வந்து, சரியாக தமது 18 வது வயதில் வெய்யில் திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். முதல் படமே யார் இந்த கம்போசர் என சொல்லும் அளவுக்கு இருந்தது பாடல்களும், பின்னணி இசையும். ஆம், அதன் பின்னரும் அவர் கொடுத்த படங்களும், பாடல்களும் தொடர் ஹிட் அடிக்க அவருக்கு புகழ் சேர ஆரம்பித்தது.

கிரீடம், ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், பொல்லாதவன், அங்காடித் தெரு, ஆடுகளம், தெய்வத்திருமகள், பரதேசி, தலைவா, ராஜா ராணி, தெறி, சைவம், அசுரன், சூரரை போற்று, சர்தார், மார்க் ஆன்டனி போன்ற சில படங்களை அவரின் கேரியர் பெஸ்ட் எனலாம்.

எப்படி இசையமைப்பாளராக தற்போது 99 படங்களை முடித்து விட்டாரோ, அப்படியே ஒரு நடிகராக அதிலும முத்திரை பதித்து தற்போது அந்த துறையிலும் 40 படங்களை கடந்து விட்டார் ஜி வி பிரகாஷ் குமார் குறுகிய கால கட்டத்தில. இந்த நிலையில் சூரியாவின் 43 படம் தான் ஜி வி யின் 100 படமாகும் ஒரு இசை அமைப்பாளராக. மேலும், தமிழ் மட்டும் இல்லாது நேரடி தெலுங்கு, கன்னட படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார்.

அவர் தற்போது தமது 18 வருட திரை அனுபவங்களை ஒரு நேர்காணல் மூலம் பகிர்ந்து உள்ளார். அதில் பற்பல கேள்விகளுக்கு அவர் லகுவாக பதில்களை உதிர்த்து உள்ளார்.

அதில், தனக்கு இந்த பயணம் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், தனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் தமது நன்றிகளை கூறினார். அதோடு, ஒவ்வொரு படத்துக்கும் ஒரு வித கதைகளங்களை உள்ளடக்கி இருக்கும் என்றும், அதற்கு ஏற்றவாறு எந்த பாடல் ஆசிரியரை அழைத்து எழத வைத்தால் நன்றாக இருக்குமோ அப்படி தான், தான் பணிபுரிவது வழக்கம் என அவர் கூறியுள்ளார்.

அப்படி, வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், ஏகாதசி, சினேகன், யுகபாரதி என பல ஸ்டார் பாடலாசிரியர்கள் பெயர்களை அடுக்கினார். மேலும், இதில் கவிஞர் வாலி, நா.முத்துக்குமார் இருவரும் சூழல் சொன்னவுடன் பாடல் கொடுத்து விடுவார்கள் எனவும் அவர்களுடன் பணிபுரிவது மிகவும் எளிது என்றும் மனம் திறந்து கூறியுள்ளார்.

அதே போல தெறி படத்துக்கு பின்னர் விஜய் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என கேட்க, அதற்கு அவர், வெற்றி மாறன், சுதா கொங்காரா படங்கள் நடந்து இருந்தால் அதற்கு நிச்சயம் இசை அமைத்து இருப்பேன் என்றும் அவர் கூறி உள்ளார். மேலும், அந்தந்த கூட்டணி அமையும் போது அதற்கு ஏற்ற கலைஞர்களுடன் பணியாற்றுவது தான் சிறந்தது என்றார்.

மேலும், தனுஷ் உடன் பாடல் பதிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அவர் தன் நண்பர் என்றும், அதனால் பாடும், எழுதும் அமர்வு மிகவும் கலகலப்பாக மற்றும் ஈஸியாக இருக்கும் என்றும் தனக்கு அவரின் குரல் மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

அதே போல மதராசப்பட்டினம் திரைப்படத்தில் இளையராஜா, ரஹ்மான் இருவரையும் பாட வைக்க முயற்சி செய்ததாகவும், அது இறுதி வரை நடக்க வில்லை என்றும், ஆனாலும, மெல்லிசை மன்னர் எம் எஸ் வி அவர்களை அந்த படத்தில் பாட வைத்தது ஒரு அரிய பாக்கியம் என்றும் நெகிழ்வான சம்பவத்தை கூறி உள்ளார்.

இப்படி தன் திரை அனுபவங்களை ஒரே நேர்காணலில் உதிர்த்து உள்ளார் ஜி வி.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *