Advertisements

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும் நிலையில், அதற்கான விரிவான வழிகாட்டுதல்களைத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான வழிமுறைகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
அதில் குறிபிட்டதாவது, வாக்குகள் எண்ணும் பணி சரியாக காலை 8 மணிக்குத் துவங்கும். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேற்பார்வையில், ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் எண்ணப்படும்.
இதில் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல்துறை, கண்காணிப்பு குழு உள்பட மொத்தம் 3 லட்சத்து 36 ஆயிரம் பேரும், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரம் பேரும் தபால் வாக்குகளை அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Advertisements




