
ஈரானின் தடைகளை நீக்கி ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும் முன்மொழிவு குறித்து அதிபர் டிரம்ப் ஆலோசிப்பதாகவும், சர்வதேச நீர்வழிப்பாதையில் ஈரானின் ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஈரானும் அமெரிக்காவும் தங்கள் தடைகளை நீக்குவதை குறித்து வெள்ளை மாளிகையில் நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேட்டபோது, செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது, அந்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டு வருவதாகயும், இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் தனது தேசிய பாதுகாப்பு குழுவைச் சந்தித்தார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ பேசியபோது, உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்காக கடந்து செல்லும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தி குறித்த ஈரானின் நிலைப்பாடு, அமெரிக்காவின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை என்று தெரிவித்தார்.
ஒரு சர்வதேச நீர்வழியை யார் பயன்படுத்தலாம், அதை பயன்படுத்துவதற்கு எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை ஈரானியர்கள் இயல்பாக்க முயற்சிப்பதை நாங்களும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்றும் அவர் கூறினார்.



