TN Assembly :தமிழ்நாடு சட்டமன்றப் பதிவுகள், நிகழ்வுகள் அனைத்தும் வலைப்பக்கத்தில் ஏற்றம்!

1952 முதல் 2024 வரையிலான தமிழ்நாடு சட்டமன்றப் பதிவுகள், நிகழ்வுகள், ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வலைப்பக்கத்தில் அனைவரும் அணுகும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அணுகக் கூடியதாக இருந்த தமிழ்நாடு சட்டமன்ற ஆவணங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் குவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
tnlasdigital.tn.gov.in என்ற வலைப்பக்கத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ள சட்டமன்றப் பதிவுகள், நிகழ்வுகளைப் பார்வையிட்டுப் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *