நான் முதல்வன் திட்டத்தால் இந்திய அளவில் 2-ஆம் இடம்!

Advertisements

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மத்திய அரசு பணியாளர் தேர்வில் சாதித்த தமிழக மாணவர்களால் தான் பெருமடைகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2025 ஆம் ஆண்டிற்கான நடத்திய குடிமைப்பணித் தேர்வு முடிவுகள் வெளியாகிய நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளனர்.
இதில், மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சிப் பெற்று, இந்திய அளவில் இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நான் முதல்வன் திட்டம் 2.O பற்றி நான் அறிவித்த நாளில் இத்தகைய வெற்றிச் செய்தி வெளியானது பெரும் ஊக்கமளிக்கிறது என்று தெரிவித்தார். நான் முதல்வனின் முதற்பகுதியே இத்தனை சாதனையாளர்களை உருவாக்கியிருக்கிறதென்றால், இதன் அடுத்த version எப்படி இருக்குமென நீங்களே பாருங்கள் என்று கூறினார்.
மேலும், நமது தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய அளவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் சாதனை படைக்கப் போகிறார்கள் என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *