திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வசதி..!

Advertisements
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் அருகில் புதிதாகக் கட்டப்பட்ட  புதியத்  திருமண மண்டபத்தை நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினரும் இணைந்து மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவத்திபுரம் வேதபுரீஸ்வரர் கோவில் அருகில் 3 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதியத்  திருமண மண்டபம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்  ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், நகர மன்ற தலைவர் மோகனவேல், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், ஒன்றிய செயலாளர் சீனிவாசன், ஒப்பந்தக்காரர் பழனி என பலர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *