
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் கஜோல், அன்று முதல் இன்று வரை பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார்.
நடிகை கஜோல் தனது 30 வருடத் திரையுலக வாழ்க்கையில் வெறும் இரண்டு தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்றபொழுதும், அவருக்கு கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பு எப்போதும் இருந்து வருகின்றது.

கடந்த 1992 ஆம் ஆண்டு பாலிவுட்டி திரையுலகில் களமிறங்கிய நடிகை கஜோல், 1997 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ராஜீவ் மேனன் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியான “மின்சார கனவு” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் களமிறங்கினர். பிரபல நடிகர்கள் அரவிந்த் சாமி மற்றும் பிரபு தேவா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகை கஜோலுக்கு, பிரபல நடிகை ரேவதி குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவருடைய திரைவாழ்க்கை 30 வருடங்களுக்கு முன்பே துவங்கிவிட்டது என்றபோது, இந்த நீண்ட பயணத்தில் அவர் குறைந்த அளவிலான படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான தனுஷின் “வேலையில்லா பட்டதாரி” படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்தார்.
தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வரும் நடிகை கஜோல், அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் போட்டோஷூட்களை எடுத்து வெளியிட்டு வருகின்றார். 50 வயதிலும் குறையாத அவர் இளமையை எண்ணி ரசிகர்கள் ஆச்சர்யப்படுகின்றனர்.

