BJP Parliamentary Party: உற்சாக வரவேற்பு!

பா.ஜ.,வின் பார்லிமென்ட் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்து கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

புதுடில்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் பா.ஜ., வெற்றி பெற்ற நிலையில், இன்று (டிச.,7) நடைபெற்ற பா.ஜ.,வின் பார்லிமென்ட் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்து கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ., 3ல் ஆட்சியை பிடித்தது. அதில் 2ல் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி சாதித்தது. லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த வெற்றி, பா.ஜ.,வுக்கு உத்வேகத்தை அதிகரித்துள்ளது. இதற்கிடையே டில்லியில் இன்று (டிச.,7) பா.ஜ.,வின் பார்லிமென்ட் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பா.ஜ., உறுப்பினர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். 3 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்தார். உறுப்பினர்களின் இந்த வரவேற்பை மோடி, அனைவரையும் பார்த்து வணங்கி முழுமனதாக ஏற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *