
காதலனுடன் வெளிநாட்டில் அவுட்டிங் சென்றபோது எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை நடிகை பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் நடிகை ஆனவர் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்கிற சீரியலில் ஹீரோயினாக நடித்த அவர், அந்தச் சீரியல் ஹிட்டானதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.
அந்த வகையில் அவர் ஹீரோயினாக நடித்த முதல் படம் மேயாத மான். அப்படத்தில் நடிகர் வைபவ்விற்கு ஜோடியாக நடித்தார் பிரியா பவானி சங்கர். அப்படமும் ஹிட் ஆனது. இதையடுத்து கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார் பிரியா.
பின்னர் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக மான்ஸ்டர், அருண் விஜய் ஜோடியாக மாஃபியா, ஹரிஷ் கல்யாண் உடன் ஓ மணப்பெண்ணே, தனுஷின் திருச்சிற்றம்பலம், சிம்பு உடன் பத்து தல எனத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்துப் பேமஸ் ஆனார் பிரியா பவானி சங்கர்.
தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2, அஜய் ஞானமுத்து இயக்கிய டிமாண்டி காலனி 2 போன்ற படங்கள் உள்ளன. இதில் இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 13-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
தற்போது ஷூட்டிங்கிலிருந்து பிரேக் எடுத்துள்ள பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலனை பார்ப்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். அங்குள்ள சிட்னி நகரில் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகை பிரியா பவானி சங்கர் ராஜவேலு என்பவரைத் தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வருகிறார். திருமணத்துக்கு முன்பே காதலனுடன் அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர், தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ள அவர், சிட்னி தனக்கு இரண்டாவது வீடு போன்றது என்றும், இதுவரை பலமுறை அங்குச் சென்றிருந்தாலும் இம்முறை தனக்கு அந்நகரம் மிகவும் அழகாகத் தெரிந்ததாகவும் அதற்குக் காரணம் தனது காதலன் தானெனப் பதிவிட்டு இருக்கிறார் பிரியா.





