Advertisements

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நடிகர் விஜய் சந்தித்து பேசிய நிகழ்வு ஒன்றை கடம்பூர் ராஜு புகைப்பட ஆதாரத்துடன் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.. அதிமுகவும் தவெக்காகவும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சூழ்நிலையில் கடம்பூர் ராஜு வெளியிட்ட தகவல் அரசியல் கட்சிகள் மத்தியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் முக்கிய தலைமை நிர்வாகியாக இருப்பவர் கடம்பூர் ராஜு இவர் முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றியவர். கோவில்பட்டி தொகுதி மக்கள் மத்தியில் தனக்கென செல்வாக்கும் மிக்கவர் இந்த கடம்பூர் ராஜு . இவர் தற்போது, நடிகர் விஜய் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசிய தகவல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் .
தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளத்தில், தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி 500க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர். இவர்கள் அனைவரும் கோவில்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு முன்னிலையில் இணைந்தனர் . அப்பொழுது கடம்பூர் ராஜு இந்த தகவலை வெளியிட்டார். அவர் பேசும் பொழுது நடிகர் விஜய் நடித்த மெர்சல் படம் வெளி ஆவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது.
இந்த படத்தில் விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என்று சான்றிதழ் அளிக்கப்பட்டால் மட்டுமே படம் வெளியாகும் என்ற சூழ்நிலை இருந்தது . அப்பொழுது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க விஜய் வந்தார் . தீபாவளி ரிலீஸ் என்பதால் வசூல் பாதிக்கும் என கூறி எடப்பாடி பழனிச்சாமி உடன் சுமார் 3 மணி நேரம் நடிகர் விஜய் பேசினார் .
இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது நான் தான் எனது ஏற்பாட்டில் தான் நடிகர் விஜய் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார். அவரது பிரச்சனை அன்றைய தினம் தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்தது. ஏனென்றால் அன்று ஞாயிற்றுக்கிழமை. இருந்தபோதிலும் நடிகர் விஜய் நேரில் வந்து சந்தித்து பேசியதால் எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு எப்படியாவது உதவ வேண்டுமென கூறினார் .
உடனடியாக டெல்லி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி மெர்சல் பட பிரச்சனைக்கு இரவோடு இரவாக தீர்வு காணப்பட்டது. இதனால் திட்டமிட்ட தேதியில் மெர்சல் படம் ரிலீஸ் ஆனது . அவருக்கு உதவ வேண்டியது ஆட்சியில் இருந்த எங்களின் கடமையாகும் . அப்பொழுது விஜய் எடப்பாடி பழனிச்சாமிடம் சொன்ன வார்த்தைகள் மிக முக்கியம் .
மெர்சல் பட ரிலீஸுக்கு உதவியதற்காக நான் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றிக் கடனாக இருப்பேன் என விஜய் பேசினார். ஆனால் இப்பொழுது விஜய் அதிமுக பெயரை உச்சரிக்கவே பயப்படுகிறார் என கடம்பூர் ராஜி தகவல் தெரிவித்த நிலையில் அது சம்பந்தமான புகைப்படத்தையும் தனது கைபேசி மூலமாக பத்திரிக்கை நிருபர்களிடம் காட்டினார் .
அவர் மேலும் பேசும் பொழுது , அரசியல் களம் தெரியாமல் நடிகர் விஜய் குதித்து விட்டார். சூழ்நிலை என்ன என்பது அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கு நன்றாக தெரியும் . ஆனால் அவரிடமும் இவர் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் . இப்பொழுதும் ஒன்றும் தவறில்லை அவர் தாராளமாக அரசியலை விட்டு மீண்டும் சினிமாவுக்கு வரலாம் அவரது சினிமா எந்தவித தடையும் இல்லாமல் வெளி ஆவதற்கு அதிமுக ஆட்சி தேவையான உதவிகளை செய்யும் என்று கூறினார் .
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவை நடிகர் விஜய் விமர்சித்து வரும் சூழ்நிலையில் ஏற்கனவே அவருக்கு எடப்பாடி பழனிச்சாமி செய்த உதவியை சுட்டிக்காட்டி கடம்பூர் ராஜு பேசியிருப்பது அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .
Advertisements


