Venkateswara Temple Tirumala: 19-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்!

Advertisements

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர்  மாதம் 19-ந்தேதி திருமலையில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறவுள்ளதாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவில் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் புகழ் பெற்றது. திருமலா திருப்பதி தேவஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் உள்ள மிகப் புகழ் பெற்ற கோவிலாகும். இக் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். திருப்பதி லட்டு மிகவும் பிரசித்தம். அதே போன்று பெருமாளுக்கு நடைபெறும் பூஜைகளும் பிரசித்தம். கருட சேவை, ஆண்டாள் திருக்கல்யாணம், பிரம்மோற்சவம், போன்ற அனைத்து பூஜைகளும் ஆகம விதிப்படி நடக்கிறது.

அதுபோல மார்கழி மாதத்தில் திருமலையில் பாரம்பரியமாக கோவில் ஆழ்வார் திருமஞ்சனமானது நடைபெறவுள்ளது.  இத் திருமஞ்சனம் ஒரு ஆண்டில் 4 முறை நடக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 24-ஆம் தேதி நள்ளிரவு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 19-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது.

பாரம்பரியமாக கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் ஆண்டுக்கு 4 முறை நடக்கிறது. அதாவது யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமையில் நடத்தப்படும். அன்று கோவிலில் அஷ்டதள பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

வைகுண்டா ஏகாதசியன்று சொர்க்க வாசல் திறப்பதையொட்டி பக்தர்கள் கூட்டம் அலை மோதும், பக்தர்களின் வசதிகளுக்காக அனைத்து வசதிகளும் கோவில் நிர்வாகமும், அரசும் மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *