சாயல்குடி இளைஞர் அதிரடி கைது..!

Advertisements

12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்ற இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் கடந்த வாரம் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து உயிர்மாய்க்கப்பட்டார். இதுகுறித்து, மாணவியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

தொடர்ந்து, மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் குற்றவாளிகளைப் பிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று  தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், மாணவி வழக்குத் தொடர்பாக சாயல்குடியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்ற இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்ந்து, காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகிவுள்ளது.

 

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *