
காமெடி மற்றும் ஆக்சன் கொண்ட கமர்சியல் படங்களை இயக்கும் சுந்தர்.சி, விஷாலுக்கு மீண்டும் ஒரு வெற்றியைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான மதகஜராஜா திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றி அடைந்தது. இந்தத் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 51 கோடி ரூபாய் வசூல் செய்தது.
இந்த நிலையில் சுந்தர்.சி மற்றும் விஷால் ஆகியோர் மீண்டும் ஒரு திரைப்படத்திற்காக இணைய உள்ளனர்.
இந்தத் திரைப்படத்தை மத கஜ ராஜா படத்தை வெளியிட உதவிய பென்ஸ் மீடியா நிறுவனத்தைச் சேர்ந்த அருண் தயாரிக்க உள்ளார்.
இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன.
மார்ச் மாதம் சுந்தர்.சி விஷால் இணையும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
காமெடி மற்றும் ஆக்சன் கொண்ட கமர்சியல் படங்களை இயக்கும் சுந்தர்.சி, விஷாலுக்கு மீண்டும் ஒரு வெற்றியைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதகஜராஜா படத்துடைய வெற்றி தமிழ்நாட்டை மட்டுமின்றி இந்திய திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்தத் திரைப்படம் வெளியாகாமல் இருக்கும் பல படங்களுக்கு உத்வேகம் கொடுப்பதாக அமைந்துள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டுத் திரைக்கு வர இருந்த படம் ‘மகாராஜா’. இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம், சோனு சூட், மணிவண்ணன், மனோபாலா, சடகோபன் ரமேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
விஜய் ஆண்டனி படத்துக்கு இசையமைத்திருந்தார். தயாரிப்பு நிறுவனத்துக்கு இருந்த சிக்கலால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இதனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் பொங்கல் வெளியீடாகக் கடந்த ஜனவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
