Actress Jayalakshmi Arrest: பண மோசடி வழக்கில் பிரபல நடிகை கைது!

Advertisements

பண மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலக்‌ஷ்மி கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் போலீசார் ஜெயல்க்‌ஷ்மியின் இல்லத்திற்கு சென்று விசாரணை நடத்தியதை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சிநேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது எனப் பாஜக நிர்வாகியும் நடிகையுமான ஜெயலட்சுமி மற்றும் திரைப்பட பாடல் ஆசிரியர் சினேகன் ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு மாறி மாறிச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துக் கொண்டனர். இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ஜெயலட்சுமி மற்றும் சினேகன் இடம் விசாரணை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சினேகன் பவுண்டேஷன் பெயரில் நடிகை ஜெயலட்சுமி பண மோசடியில் ஈடுபட்டதாகப் பாடல் ஆசிரியர் சினேகன் தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி மீண்டும் பாடல் ஆசிரியர் சினேகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.மேலும் நடிகை ஜெயலட்சுமி சம்பவம்குறித்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

பின்னர் இதுகுறித்து விசாரணை செய்த நீதிபதிகள் பாடல் ஆசிரியர் சினேகன் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனப் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டுப் பாடல் ஆசிரியர் சினேகன் மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து சினேகம் அறக்கட்டளை பண மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனப் பாடல் ஆசிரியர் சினேகன் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணை செய்த நீதிபதிகள் ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டனர் அதன் அடிப்படையில் நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி உள்ளிட்ட இரு பிரிவின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பினரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்திரலையில் இந்தச் சினேகம் அறக்கட்டளை வழக்குகுறித்து தற்போது சென்னை திருமங்கலம் போலீசார் திருமங்கலம் பகுதியில் உள்ள பாஜக பிரமுகர் சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.  சுமார் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்தச் சோதனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் வர உள்ளதால் சினேகம் அறக்கட்டளையில் நடத்தப்பட்ட வங்கி பரிவர்த்தனைகள், ஆவணங்கள் உள்ளிட்டவைகள் குறித்து போலீசார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாகப் போலீசாரின் சோதனை நடைப்பெற்று வந்ததை தொடர்ந்து, தற்போது ஜெயலக்‌ஷ்மி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *