திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் திமுகவில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் திமுகவில் இணைந்து கொண்டார். இந்நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதை தொடர்ந்து ரஞ்சனா நாச்சியார் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொள்வதை பெருமையாக கருதுகிறேன் என்று கூறினார். பெண்கள் பாதுகாப்பை திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கொடுக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகம், தமிழக மக்களை ஏமாற்ற தான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது என்று குற்றம் சாட்டினார். பெண்களுக்கு எதிரான கருத்துக்களை, ஒடுக்கு முறைகளை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *