ஜெயலலிதா நினைவுநாளையொட்டி தலைவர்கள் அஞ்சலி.!

ஜெயலலிதா நினைவுநாளையொட்டிச் சென்னை மெரினாக் கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டித் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

இதேபோல் சென்னை மெரினாக் கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *