Pongal Festival 2024: பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு!

Advertisements

பொங்கல் பண்டிகையை ஒட்டிக் கன்னியாகுமரி தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூஜைக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதற்காகத் தற்போது பொதுமக்கள் முன்வந்துள்ளனர். அதில் முக்கியமாகக் கருதப்படும் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தோவாளை மலர்சந்தையில் கிலோ ரூ.1,600க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகைப்பூ தற்போது ரூ.2,100க்கு விற்பனையாகிறது. பிச்சிப்பூ கிலோ ரூ.1,500க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.2,100ஆக அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மலர்சந்தையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,200க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.4,000க்கு விற்பனையாகிறது. ரூ.600க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ தற்போது கிலோ ரூ.2,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஜாதிப்பூ, தற்போது கிலோ ரூ.1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மலர்சந்தையில் கிலோ ரூ.2,500க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகைப்பூ தற்போது ரூ.4,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.2,000க்கு விற்கப்பட்டு வந்த முல்லைப்பூ ரூ.3,000க்கும், ரூ.1,200க்கு விற்கப்பட்டு வந்த ஜாதிப்பூ ரூ.3,000க்கும் விற்பனையாகிறது.

தற்போது மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நேற்று வரை ரூ.1000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பூக்கள் அனைத்தும் தற்போது ரூ. 3000, 2000 வரை விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை பூக்கிலோ 3000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்கள் கிலோ 2000 ரூபாய்க்கும் மெட்ராஸ் மல்லிகை 2000 ரூபாய்க்கும், சம்மங்கி சம்மந்தியாகிய பூக்கள் 250 ரூபாய்க்கும், செண்டுமல்லி 100 ரூபாய்க்கும், அரளி 450 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *