
தில்லி சென்றுள்ள தமிழக பாஜக தலைவர்களுடன் சட்டமன்றத் தேர்தல் உத்திகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில் தேர்தலில் எத்தகைய உத்திகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்துத் தில்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் கருத்துரைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு பாஜக தலைவர்களான நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி, தமிழிசை ஆகியோர் ஏற்கெனவே தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

