உக்ரைன் படைகளுக்கு புடின் எச்சரிக்கை !

Advertisements

டோன்பாசில் இருந்து உக்ரைன் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரஷ்யா அதை வலிந்து கைப்பற்றும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையான போரை நிறுத்தி அங்கு அமைதி நிலவச் செய்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளார். இது குறித்து இரு நாடுகளின் தலைவர்களுடன் ஒரு சுற்றுப் பேச்சு முடிவடைந்த நிலையில், அமெரிக்காவின் மியாமியில் உக்ரைன் நேற்று இரண்டாம் சுற்றுப் பேச்சு நடைபெற்றது.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் விவகாரம் குறித்துப் பேசியுள்ளார். அப்போது டோன்பாசில் இருந்து உக்ரைன் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரஷ்யா அதை வலிந்து கைப்பற்றும் என்றும் எச்சரித்தார்.
உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கி மூன்றாண்டுகள் ஆகும் நிலையில் அந்த நாட்டின் கிழக்கில் ரஷ்ய எல்லையில் உள்ள டோன்பாஸ் மண்டலத்தின் 85 விழுக்காடு பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத் தக்கது.

இதனிடையே எக்காரணம் கொண்டும் டோன்பாஸ் மண்டலத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *