ஜப்பான் தொழில் துவங்க ,கோவை தொழில் துறையினருக்கு வாய்ப்பு – மேயர் பேச்சு.!

Advertisements

ஜப்பான் நாட்டின் ஹமாமட்சு நகரில் தொழில் துவங்குவதற்காக,கோவை தொழில் துறையினருக்கு வாய்ப்பு உள்ளதாக துணை மேயர் தெரிவித்துள்ளனர்.

கோவையை சேர்ந்த 13 உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு சமீபத்தில் ஜப்பானின் ஹமாமட்சுவுக்குச் சென்றது,

அங்கு முன்னணி தொழில்துறையினரை சந்தித்து,வணிக மேம்பாடு தொடர்பான வழிகளை ஆராய ஹமாமட்சு நகர மேயரைச் சந்தித்தனர்.

இந்நிலையில் ஜப்பான் நாட்டின் துணை மேயர் நைட்டோ ஷின்ஜிரோ தலைமையில் ஜப்பான் நாட்டில் இருந்து வந்த குழுவினர், கோவையில் கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்லூரி வளாகத்தில், தொழில் துறையினருடன் ஆலோசணை நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜப்பான் இந்திய வர்த்தகத்தில் தமிழகம் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தனர்.

தற்போது கோவை நகர் மற்றும் ஜப்பானின் ஹமாமட்சு நகர் இடையே தொழில் வர்த்தகம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாகவும்,கோவையில் இருந்து ஜப்பானிற்கு தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *