
வக்பு வாரிய திருத்த சட்டத்தை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரியில் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வக்பு வாரிய திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 70-மசூதிகளின் முன்பு, ஜும்மா தொழுகை முடிந்த பிறகு, இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர். எஸ். மசூதி முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக மசூதிகளின் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பின் மாநில துணை செயலாளர் டி.எஸ். எக்பால் தலைமை தாங்கினார். இதே போன்று, தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து மசூதிகள் முன்பும் இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தர்மபுரி மாவட்ட முத்தவல்லி சங்கத் தலைவர் டி.எஸ்.ஜப்பார், செயலாளர் டி.கே.பாபு, பொருளாளர் முஸ்தாக் உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். அப்போது, வக்பு வாரிய திருத்த சட்டத்தை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
