தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம் நடத்துவது தொடர்பாக செப்டம்பர் 30-ஆம் தேதி இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, மம்தா பானர்ஜி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் கடந்த ஆண்டு தொடங்கியது. பல மாநிலங்களில் பணிகள் முடித்துவிட்டன. தற்போது மீதமுள்ள மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த திருத்தத்தின்போது பல லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். படிவம் 6-ன் மூலம் பல கிடுக்கிப்பிடி கேள்விகளும், அதற்கான ஆதாரங்களும் கேட்கப்பட்டன.
இதன் விளைவாக பல லட்சம் பேர் வாக்காளர் பட் டியலிலிருந்து நீக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாது புதிய வாக்காளர்களும் சேர முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் படிவம் தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் எழுப்பிய கேள்விகளை புறந்தள்ளிவிட்டு. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் இதை கையில் எடுத்துள்ளன. இந்நிலையில். தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம் நடத்துவது தொடர்பாக செப்டம்பர் 30-ஆம் தேதி இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு தி.மு.க.தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு, மம்தா பானர்ஜி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
கூட்டத்தில், சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே. சி.பி.எம் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, மம்தாவின் மருமகள் அபிஷேக்-பாளர்ஜி, சிவசேனைத்தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

