ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மெல்போர்னில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற்றது.

இதில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்கிய நிலையில், 19 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. இதில், அபிஷேக் சர்மா 68 ரன்கள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து, 125 ரன்கள் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *