சீறிப்பாய்ந்த 800 காளைகள்..!

Advertisements

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் சக்கரபாணி கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொசவபட்டியில் புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கொடியசைத்து  தொடங்கி வைத்தார். இதில், திண்டுக்கல்,கரூர், மதுரை, சிவகங்கை, தேனி,புதுக்கோட்டைஉள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகளும்,400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்.

காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து, ஜல்லிகட்டு போட்டியை காண நடிகை துஷாரா விஜயன் பங்கேற்று போட்டியை வீடியோ எடுத்து மகிழ்ந்தார். போட்டியில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு செல்போன், கட்டில்,பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, 350 க்கும் மேற்பட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *