இன்று இரவு எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை தெரியுமா..?

தமிழகக் கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப்பாதை நிலவுகிறது.

இதனால் இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

ஆகஸ்டு 24ஆம் நாள் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகச் செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தில் 6 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *