இளைஞரை கொலை செய்த தவெக நிர்வாகி குடும்பம்.! 4 பேர் கைது..!

Advertisements

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகியான ஏழுமலை என்பவரின் 21ஏ வயதான மகள் படூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.அதே பகுதியை சேர்ந்த 22 வயதான பிரவீன் என்ற இளைஞரும் தவெக நிர்வாகி ஏழுமலை என்பவரின் மகளும் கடந்த இரண்டு வருடங்களாக ஒருவருக்கொருவருர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை பிரவீன் வீட்டின் அருகே சென்றபோது ஏழுமலையின் தம்பி மணிகண்டன் என்பவர் பிரவீனை வழிமறித்து பேசியுள்ளார். அங்குதான் காதலன் கதையை முடிப்பதற்காக முதல் கட்ட பேச்சு ஆரம்பமாகிறது.அப்பொழுது தனது அண்ணன் ஏழுமலையின் மகளை காதலிப்பதை விட்டு விடு என்று கூறியதும், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்.

அந்த பெண் என்மீது அதிக பாசமாக உள்ளார் என்பதால் நான் விட்டு விட்டு செல்ல முடியாது என்று கொலையான பிரவீன் வீர வசனம் பேசியதாக சொல்லப்படுகிறது.பின்னர் மணிகண்டன் அவரது அண்ணன் ஏழுமலை, அண்ணனின் மகன் கெளதம் ஆகியோர்க்கு செல்போனில் தொடர்பு கொண்டு இனிமே இது சரி பட்டு வராது மாப்பு. சொல்லியும் பாத்தாச்சு, திட்டியும் பாத்தாச்சு இவன் கேட்கிற மாதிரி தெரியவில்லை என்பதால் சம்பவ இடத்திற்கு காதலனை போட்டு தல்ல அவர்களை வரவைத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு கூர்மையான கத்தியுடன் வந்த ஏழுமலை, கெளதம், கௌதமின் நண்பன் நித்திஷ் ஆகிய மூவரும் பிரவீனை முதலில் சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். பின்னர் கத்தியால் தலை, முகம் உள்ளிட்ட பல இடங்களில் கண்மூடித்தனமாக வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டு அங்கிருந்து நான்கு பேரும் தப்பி சென்றுள்ளனர். பாவம் காதலுக்காக பாசம் என்றெல்லாம் வெட்டி வீராப்பு பேசிய காதலன் வெட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்து விழுந்து கிடந்த பிரவீனை அக்கம் பக்கத்தினர் பார்த்து அய்யோ யார் பெத்த மகனோ என்று பரிதாமம் காட்டி 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பிரவீன் பல நாள் அவளை காதலித்தும்,

வாழ்க்கையில் கரை சேரமுடியாமல் போனதே என்ற வருத்தத்தில் ஆணவக் கொலைக்கு உட்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் அவரது வாழ்க்கையில் காதலுக்குகாக அவரது உடல் கரை ஒதுங்கியதுதான் மிச்சம் இச்சம்பவம் குறித்து கொலையான பிரவீனின் தாய் பிரபாவதி துடிதுடித்துபோய் ஐய்யோ என் மகனை கொன்று விட்டார்களே என்ற அலறியடித்தபடி ஓடோடி ஓடாடி சென்று தன் மகனை கொன்றவனுக்கு உரிய தண்ணடனை வேண்டும் என்று கண்ணகியை போல நீதி கேட்டு கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கேளம்பாக்கம் ஆய்வாளர் தமிழன்பன் தலைமையில் தனிப்படை அமைத்து பிரவீனை கொலை செய்த வழக்கில் தவெக நிர்வாகி பெண்ணின் தந்தை ஏழுமலை, ஏழுமலையின் மகன் கெளதம், ஏழுமலையின் தம்பி மணிகண்டன், கௌதமின் நண்பர் நித்திஷ் ஆகிய நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

வாழ வேண்டிய வயதில் வானம் சென்ற பிரவீன் ஆன்மாவின் பூதல் உடல் மருத்துவமனையில் இருந்து இறுதி சடங்கு செய்வதற்காக அவர் வீட்டிற்கு எடுத்துச் சென்றபோது அவர் வீட்டிற்கு அருகே அவர் உடலை வாங்காமல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொலைக்கு சம்பந்தப்பட்ட மற்றும் கொலைக்கு உறுதுணையாக இருந்த நபர்களை கைது செய்ய வேண்டும் என கூறி பொதுமக்கள் கூப்பாடு போட்டு நீதி கேட்டு மன்றாடினர்.

கொலை வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு வக்காளத்து வாங்கிவிட்டு சாலை மறியல் ஈடுபட்ட நபர்களை தடுக்கச் சென்ற காவல்துறைக்கும் பொதுமக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

திருப்போரூர் ஒன்றிய தவெக நிர்வாகி ஏழுமலை அவரது மகளை காதலித்த இளைஞரை மகன்,தம்பி,மகனின் நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டு கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் எரிமலைபோல் மக்கள் மனதில் வெடிப்பையும், கொந்தளிப்பையும் புயலென கக்கியது.

காதல் பிஞ்சு மொட்டு வாழ வேண்டிய வயதில் அதிகாரம் இருக்கிறது என்ற மிதப்பில் சாதியை சாப்பாடாக உண்றுவிட்டு பசியாறிய இந்த கொடூர குடும்ப கொலை கும்பலுக்கு சட்டம் தகுந்த பாடத்தை புகட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *