“அனைத்து வழிகளிலும் பதிலடி கொடுப்போம்” – அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல்!

Advertisements

ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதித்தால், அனைத்து வழிகளிலும் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.

ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும், அந்நாட்டு துறைமுகங்களை முற்றுகையிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஈரானுக்கு உதவ முயற்சிக்கும் நாடுகளும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள ஈரான் ராணுவம், “பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால், தரை, கடல், வான் என அனைத்து வழிகளிலும் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *