CBI விசாரணை முறையானதாக இல்லை என உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு..!

Advertisements

டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தியது கூட்டாட்சிக்கு எதிரான நடவடிக்கை என அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தில்லி உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தியது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், உங்களது விசாரணை கூட்டாட்சிக்கு எதிரானது என்றும் மாநில அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்ற சந்தேகம் இருந்தால் அவர்களது உரிமையில் உடனடியாக அமலாக்கத்துறை அதில் தலையிடுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கடந்த ஆறு ஆண்டுகளாக அமலாக்க துறை விசாரணையில் நல்லவிதமாக சொல்லும் அளவிற்கு இல்லை என்றும் சட்டம் ஒழுங்கு யார் கட்டுப்பாட்டில் உள்ளது? என்று தொடர்ந்து சரமாரி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்ததோடு டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது தொடரும் என உத்தரவிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *