கேரளாவில் முகாமிட்ட ‘ஜெயிலர் 2’ படக்குழு..!

Advertisements

ஜெயிலர் இரண்டாம் பாகம் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் கேரளாவிற்கு சென்றடைந்துள்ளார்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜெயிலர் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகை தனது வீட்டில் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்புக்காக கொச்சி சென்றார். ரஜினிகாந்துடன் இயக்குநர் நெல்சனும் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவில் பெரிய நீர்வீழ்ச்சியான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஜெயிலர் 2 ஷூட்டிங் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தில், ரம்யா கிருஷ்ணன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *