மோடி ஆட்சியில் அரசியலமைப்பு சட்டத்திற்கே ஆபத்து!

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு பிரதமராக மோடி வந்த பிறகு ஆபத்து வந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராசா தெரிவித்துள்ளார்.

சென்னை, கோடம்பாக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி, திமுக தென்மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் உமாசங்கர் தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ராசா பேசிய போது, இந்தியாவில் வேற்றுமைகளை அங்கீகரிக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு பிரதமராக மோடி வந்த பிறகு ஆபத்து வந்துள்ளது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *