Christopher Luxon:இந்தியர்கள் கடின உழைப்பாளிகள்…அவர்களை நான் நேசிக்கிறேன்..நியூசிலாந்து பிரதமர் புகழாரம்!

ஆசியா அமைப்பின் 19-வது உச்சி உச்சி மாநாடும் அங்கு நடைபெறுகிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாகப் பிரதமர் மோடி லாவோஸ் நாட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு நடைபெற்ற ஆசியான் மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடியுடனான சந்திப்புகுறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். இந்திய நாட்டை நான் நேசிக்கிறேன், மிகவும் மதிக்கிறேன். நியூசிலாந்தில் உள்ள இந்தியர்கள் திறமையாகச் செயலாற்றி வருகிறார்கள். அவர்கள் மிகுந்த உத்வேகம் அளிப்பவர்கள், கடின உழைப்பாளிகள்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு அற்புதமாக இருந்தது. என்னை இந்தியாவுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார். அதற்கான சரியான நேரத்தை நாங்கள் விரைவில் முடிவு செய்வோம். இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான உறவை மேலும் பலப்படுத்தத் தொடர்ந்து உழைப்போம்.”இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *