ரஷ்யாவை உலுக்கும் வரலாறு காணாத பனிப்பொழிவு..!

Advertisements

ரஷ்யாவில் வரலாறு காணாத அளவில் கடும் பனிப் பொழிவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோ மற்றும் பல்வேறு நகரங்களில் வரலாறு காணாத வகையில், மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதில், உயரமான கட்டிடங்களிலும், சாலைகளிலும் மலை போல் பனி குவிந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கடும் பனிப் பொழிவால் 2 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. இதையடுத்து, ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பனியை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *