விவசாயிகளுக்கான பயிற்சி முகாமைத் திமுக அரசு ரத்து..!

இஸ்ரேல் உதவியுடன் தமிழகத்தில் நடக்கவிருந்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாமைத் திமுக அரசு ரத்து செய்துள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் உதவியுடன் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்காக நடத்தவிருந்த பயிற்சி முகாமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தத்தின் பேரில் திமுக அரசு ரத்து செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த பாசன வசதியில் நிறைய விளைச்சல் பெற்று வேளாண்துறையில் புரட்சி செய்து கொண்டிருக்கும் இஸ்ரேலின் தொழில்நுட்பத்தைத் தமிழக விவசாயிகளுக்குக் கற்றுத்தராமல் தடுப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அப்படி என்ன ஆனந்தம்? என்று வினவியுள்ளார்.

இஸ்ரேல் பாலஸ்தீனத்துடன் போரிடுவதால், தமிழக விவசாயிகள் இஸ்ரேலின் வேளாண் நுட்பங்களைக் கற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்வது எப்படி நியாயமாகும்? என்றும் வினவியுள்ளார்.

வாக்கு வங்கி அரசியலுக்காக, உணவளிக்கும் விவசாயிகளின் நலனைத் திமுக அரசு அலட்சியப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *