Todays Gold Rate: தங்கம் விலை ஒரே நாளில் கிடுகிடு உயர்வு!

தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன்  காணப்படும் நிலையில் இன்று திடீரென்று சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2.50 உயர்ந்து ரூ.79.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களில் மக்கள் முதலீடு செய்து வரும் சூழலில் இப்படியான திடீர் விலையேற்றம் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் விலையேற்றம் சேமிப்பாளர்களுக்கு ஒரு சவாலாக அமைவதாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று டிசம்பர் 13ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று(டிச.,14) அதிரடியாக உயர்ந்துள்ளது.ஒரு கிராம் வெள்ளி ரூ.2.50 உயர்ந்து ரூ.79.50க்கும், கிலோ வெள்ளி ரூ.2500 உயர்ந்து ரூ.79.500க்கும் விற்பனை ஆகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *