
கேரளத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் உடலுக்குத் தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
2006 முதல் 2011 வரை கேரளத்தின் முதலமைச்சராக இருந்த அச்சுதானந்தன் தனது 101ஆவது வயதில் நேற்றுக் காலமானார். அவர் உடல் திருவனந்தபுரத்தில் மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அச்சுதானந்தன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அச்சுதானந்தன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர், அச்சுதானந்தன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.



