Advertisements

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் தான் இருக்கின்றன. அனேகமாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என தெரிகிறது . எனவே திமுக அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இப்பொழுதே வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனை களத்தில் இறங்கி விட்டார்கள்.
திமுக அதிமுகவை பொறுத்த வரையில் தலா ஒரு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்கள் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகத்திலும் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது ஐந்து பேர் கொண்ட குழுவினர் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள் .
தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்த வரையில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் பல சிக்கல்கள் நீடிக்கின்றன இருந்த போதிலும் தற்போது முதல் கட்டமாக 50 தொகுதிகளுக்குரிய வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். விஜய் ரசிகர் மன்றத்திலும் விஜய் மக்கள் இயக்கத்திலும் நீண்ட காலம் பணியாற்றிய தீவிரமான ரசிகர்களுக்கு தற்பொழுது வேட்பாளர் வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே கட்சி நிர்வாக பொறுப்பிலும் அவர்களுக்கு னத்தான் முக்கியத்துவம் தரப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் முதல் கட்டமாக 30 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் மற்றும் முழு விவரங்கள் வெளியே கசிந்துள்ளன அவற்றை தொகுதி வாரியாக இப்போது காணலாம் .
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புசி ஆனந்த் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் இது அவரது சொந்த ஊராகும். புசி ஆனந்த் விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்தவர்.தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் ஆலோசனை குழு தலைவரான ஆதவ் அர்ஜுனா விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் ரெட்டியார் இனத்தைச் சேர்ந்தவர்,
தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளரான டாக்டர் அருண்ராஜ் நாமக்கல் அல்லது திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர். தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர் .
கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்.
துணைப் பொதுச் செயலாளர் விஜயலட்சுமி நாமக்கல் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கொங்கு வேளாளர் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர் .
தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர் திட்டக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் . தமிழக வெற்றி கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் அருள் பிரகாசம் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுகிறார் . இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் .
திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளர் ராஜகோபால் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுகிறார் . இவர் யாதவர் இனத்தைச் சேர்ந்தவர் . மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் அன்பன் மதுரை கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர் .
புதுக்கோட்டை மத்திய பகுதி மாவட்ட செயலாளர் பர்வேஸ் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுகிறார் . இவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் .
கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர் .
ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளரான வெங்கடேஷ் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்.
கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர் .
நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார் .
கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கரூர் தொகுதியில் போட்டியிடுகிறார் . இவர் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர்.
கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் பரணி பாலாஜி திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் . இவர் உடையார் இனத்தைச் சேர்ந்தவர் .
தஞ்சாவூர் மத்திய பகுதி செயலாளர் விஜய் சரவணன் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர்.
தர்மபுரி மேற்கு பகுதி மாவட்ட செயலாளர் சிவன் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர்
ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் பாலாஜி ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் நாயுடு இனத்தைச் சேர்ந்தவர் .
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சம்பத்குமார் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர் .
நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் சுகுமார் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் மீனவர் இனத்தைச் சேர்ந்தவர் .
மதுரை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் தங்கபாண்டி மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்தவர் .
சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் அப்புனு என்கிற வேல்முருகன் சென்னை தி.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் . மாற்றுத்திறனாளி ஆன இவர் யாதவர் இனத்தைச் சேர்ந்தவர் .
அரியலூர் மாவட்ட செயலாளர் சிவகுமார் அரியலூர் தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் உடையார் இனத்தைச் சேர்ந்தவர் .
சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் உடையார் இனத்தைச் சேர்ந்தவர் .
கட்சியில் எந்த பதவியும் வகிக்காத மரிய வில்சன் என்பவர் சோளிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் மீனவர் இனத்தைச் சேர்ந்தவர் . அதேபோல் கட்சியில் பதவி எதுவும் வகிக்காத பாலசுப்ரமணியன் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் இவர் நாடார் இனத்தைச் சேர்ந்தவர் .
மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் குட்டி கோபி மயிலாடுதுறையில் போட்டியிடுகிறார். இவை அனைத்தும் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலாகும் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பட்டியல் தயாராகி வருகிறது
இது போன்ற அரசியல் செய்திகளுக்கு ஜெம் தொலைக்காட்சியுடன் எப்போதும் இணைப்பில் இருங்கள் நன்றி..
Advertisements



