Vaikunta Ekadasi 2023: திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் திறப்பு!

Advertisements

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில்  சொர்க்கவாசல் இன்று அதிகாலை திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்கள் கோவிந்த கோவிந்தா என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

சொர்க்கவாசல் திறப்பில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வைணவ தளங்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களின் கோவிந்தா… ரங்கா… கோஷங்களுக்கிடையே அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

அதேபோல், பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நள்ளிரவு 1.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

108 திவ்யதேசங்களில், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது.  இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட  ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி  முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திராளன பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் 108 திவ்யதேசங்களில், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலிலும்   வைகுண்ட  ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4 மணிக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது பார்த்தசாரதி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அதேபோல்,  ஆதிதிருவரங்கம், வரதராஜபெருமால் கோவில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்,  மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயில்களில் உள்ளிட்ட கோயில்கள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வைணவ திருக்கோயில்கள் சொர்க்கவாசல் இன்று திறக்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *