Chennai : பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, சென்னையில், பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். இதில், தியாகராயர் நகர், மேற்குமாம்பலம், கோடம்பாக்கம், அசோக் நகர், வடபழனி, சைதாப்பேட்டை, கிண்டி, தேனாம்பேட்டை, மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், எழும்பூர், புரசைவாக்கம், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *