Israel Hamas War Updates: கட்டுப்பாட்டுக்குள் காசா!

காசா எல்லையைக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகத் தகவல்!

காசா எல்லை முழுவதுவதுமாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசா முனைக்கு அருகே உள்ள இஸ்ரேலின் தெற்கு பகுதியான கர்மியா, அஷ்கிலோன், டிரோட் ஆகிய 3 நகரங்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து 3வது நாளாகத் துப்பாக்கிச்சண்டை நீடித்து வருகிறது.  காசாவுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் காசா எல்லை முழுவதுமாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. உணவு, எரிபொருள் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் இஸ்ரேல்  ராணுவ  அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனா கண்டனம்:

இஸ்ரேல்-ஹமாஸ் வன்முறையில் பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களை எதிர்ப்பதாகவும், மக்கள்மீதான தாக்குதலைக் கண்டிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தொடர்பா? ஈரான் மறுப்பு

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு ஈரானின் பங்கு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரானை தொடர்புபடுத்தி கூறப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நசீர் மனானி தெரிவித்தார். மேலும், ஈரானின் எந்த உதவியும் இல்லாமல், பாலஸ்தீனியர்களுக்குத் தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்கும் தங்கள் உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் தேவையான ஆற்றல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *