
இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி விளையாடிய விதம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வளர்ந்து வரும் இளம் வீரர்கள் விராட் கோலியின் பிட்னஸை பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். இன்றளவும் விராட் கோலி, விக்கெட்டுகளுக்கு இடையில் ரன்களை எவ்வளவு வேகமாக ஓடி எடுக்கிறார் என்று பாருங்கள். அதோடு டாட் பால்களை குறைத்துக் கொண்டு தொடர்ச்சியாக 1,2 ரன்கள் எடுத்துப் பவுலர்களின் மீது அழுத்தத்தைக் கொடுக்கிறார்.
அவரைப் போன்று ரிஸ்க் இல்லாமல் டாட் பாலை குறைத்துக் கொண்டு ஸ்ட்ரைக்கை ரோடேட் செய்வதை இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். விராட் கோலி இளம் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்’ எனக் கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.

