Ajith:காரா கப்பலா? அடுத்த புதிய காரை வாங்கிய அஜித்.. விலை எவ்வளவு தெரியுமா?

Advertisements

Ajith: பொதுவாக மனிதர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் அவர்களுக்கென ஒரு தனி பேஷன் இருக்கும். பிடித்ததை செய்வது. நினைத்த மாதிரி வாழ்வது எனத் தான் என்னெல்லாம் நினைத்தோமோ அதன்படியே தன் வாழ்க்கையை கொண்டு செல்பவர்கள் இருக்கிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் அஜித் ஒரு வித்தியாசமான மனிதராகப் பார்க்கப்படுகிறார். அவர் இந்த அளவுக்குச் சுதந்திரமாக இருக்கிறார் என்றால் அதற்கு முழு காரணம் அவருடைய காதல் மனைவியான ஷாலினி. எந்த ஒரு மனைவியும் தன் கணவர் தன்னுடன் இருக்க வேண்டும் .எங்குப் போனாலும் தன்னையும் தன் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.

ஆனால் அஜித் ஷாலினியை பொருத்தவரைக்கும் ஷாலினி முழுக்க முழுக்க குடும்பத்தையும் குழந்தைகளையும் மட்டுமே கவனித்து வருகிறார். அஜித் மட்டுமே வெளிநாடு படப்பிடிப்பிற்கு செல்வது அங்கு இருக்கும் இடங்களைச் சுற்றிப் பார்ப்பது இதற்கிடையில் தனது பைக் பயணத்தைத் தொடர்வது என மிகவும் சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

பைக் பயணம், ரைஃபிள் சுடுதல் ,ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தில் ஈடுபடுதல் இதுபோக அஜித்திற்கு சந்தையில் புதியதாக இறக்குமதியாகும் கார்களை வாங்குவதும் பிடிக்கும் போல .சமீபத்தில் தான் ஒரு புதிய பெராரி காரை வாங்கி இருந்தார் அஜித்.

அந்தக் கார் அருகில் நின்று கொண்டிருப்பது போல அவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. நேற்று கூட அதே காரில் வெளிநாட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் வீடியோவும் வைரலானது. இந்த நிலையில் மறுபடியும் ஒரு புதிய காரை அஜித் வாங்கி இருக்கிறார் .அதை ஷாலினி அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்திருக்கிறார்.

2024 மாடல் காரான போர்ச் 911 காரைத் தான் அஜித் வாங்கி இருக்கிறார். அந்தப் புகைப்படத்தை ஷாலினி தன்னுடைய இணையதள பக்கத்தில் வெளியிட்டுக் கூடவே ‘கடைசியாக அவர் பெற்றுவிட்டார்’ என்றும் ஒரு கேப்ஷனை பதிவிட்டு இருக்கிறார் ஷாலினி.அந்தக் காரின் விலை 3கோடியே 56 லச்சம் எனக் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட நாலறைக் கோடி மதிப்பிலான அந்தக் காரில் அஜித் நின்று கொண்டிருக்கும் மாதிரி போஸ் கொடுத்துள்ளார். பைக் ரேஸ் கார் ரேஸ் இவைகளில் ஆர்வம் உடைய அஜித் இப்போது புதிது புதிதாகக் காரை வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அவர் எதை நோக்கிப் பயணிக்கிறார் அவருடைய நோக்கம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இதற்கிடையில் துபாயில் ஒரு வீடு வாங்கி இருப்பதாகவும் தகவல் வெளியானது ஒரு வேளை சினிமாவிற்கு பிறகு குடும்பத்துடன் துபாயில் செட்டிலாகப் போகிறாரா என்றும் தெரியவில்லை.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *