இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 18 பேர் பலி; 34 பேர் மாயம்..!

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவுனால் 18 பேர் உயிரிழந்த நிலையில் 34 பேர் மாயமாகி உள்ளனர்.

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் தொடர்ந்து பலத்தக் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் பல வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில், 18 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக பேரிடர் தணிப்பு கழகம் வெளியிட்ட செய்தியில், மத்திய ஜாவாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 34 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 30 வீடுகள் மற்றும் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, மாயமானவர்களைத் தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *