
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆற்றலும், ஆளுமையும் பிரதமருக்கு இல்லை! ராகுல் காந்தி…
சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடந்தது. 5 மாநில சட்டப்பேரவை நேர்தல் தொடர்பாகக் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துக்குப் பின் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது, நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசை வலியுறுத்துவது எனக் காங். செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய பாஜக ஆட்சி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அல்லது ஆட்சியை விட்டுச் செல்ல வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய பாஜக அரசால் நடத்த முடியவில்லை என்றால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து. ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பிறகே மக்களின் பொருளாதார நிலைகுறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
காங்கிரஸில் 4 முதலமைச்சர்களில் 3 பேர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவில் 10 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள்; அதில் ஒருவர்தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். பாஜகவில் உள்ள ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஒரு முதல்வரும் இந்தத் தேர்தலுக்குப் பிறகு முதல்வராக நீடிக்கமாட்டார்.
முதலமைச்சர்கள் அசோக் கெலாட், சித்தராமையா, புபேஷ் பகெல், சுக்விந்தர் சுகு புடைசூழ ராகுல் பேட்டியளித்துள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் ஆற்றலும், ஆளுமையும் பிரதமர் மோடிக்கு இல்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பிரதமர் மோடி என்ன செய்துள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் பாஜக ஆட்சியில் மறுக்கப்பட்டு வருகிறது. பட்டியல், பழங்குடியின, ஒபிசி பிரிவு மக்களைத் தவறாக வழிநடத்தவே பிரதமர் மோடி செயல்படுகிறார்.
ஓபிசி மக்களின் நலனுக்காகப் பிரதமர் மோடி எதையும் செய்யவில்லை என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகப் பிரதமர் மோடி என்ன செய்துள்ளார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் பாஜக ஆட்சியில் மறுக்கப்பட்டு வருகிறது. பட்டியல், பழங்குடியின, ஓபிசி பிரிவு மக்களைத் தவறாக வழிநடத்தவே பிரதமர் மோடி செயல்படுகிறார்.
சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசம், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்; மிசோரமிலும் சிறப்பாகப் பங்காற்றுவோம்.

