“பிக்பாக்கெட்” அடித்த குரங்கு : குணா குகையில் வைரல் ஆன வீடியோ.!

Advertisements

கொடைக்கானலில் உள்ள குணா குகையில் சுற்றுலா பயணி ஒருவரது பேண்ட் பாக்கெட்டில் உணவுப் பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என குரங்கு ஒன்று தீவிரமாகத் தேடிப் பார்க்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள குணா குகை சுற்றுலா தளத்தில் பெண் சுற்றுலா பயணி ஒருவரின் மாத்திரையை குரங்கு ஒன்று எடுத்து சென்றுள்ளது. அதனை மீட்க அந்த பெண் சிறிது நேரம் போராடியப் பிறகு, அந்த மாத்திரையை குரங்கு தூக்கி எறிந்து சென்றுள்ளது.

இதேபோல் மற்றொரு சுற்றுலா பயணியின் பேண்ட் பாக்கெட்டில் உணவுப் பொருட்கள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு செய்து பார்த்துள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *