West Bengal : பாஜக ஆட்சிக்கு வந்தால் ‘குண்டர் ராஜ்ஜியம்’ முடிவுக்கு வரும் – அமித் ஷா

Advertisements

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அங்கு ‘குண்டர் ராஜ்ஜியம்’ முடிவுக்கு வரும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் தெஹட்டாவில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது, சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டத்திலேயே வாக்காளர்கள் மம்தா பானர்ஜியின் அரசை முற்றிலுமாக அழித்துவிட்டனர் என்று கூறினார். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் பாஜக ஏற்கனவே 110 இடங்களை கைப்பற்றியுள்ளது என்றும் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அங்கு ‘குண்டர் ராஜ்’ முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் பதுங்கியிருக்கும் ஊடுருவல்காரர்களை” அடையாளம் கண்டு, அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இதன் பின்னர், அதே மாவட்டத்தின் ராணாகாட்டில் நடந்த மற்றொரு கூட்டத்தில் அமித் ஷா பேசியபோது, பெரும்பாலான கால்நடை கடத்தல் நாடியா வழியாகவே நடைபெறுவதாகக் குற்றம் சாட்டினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *