
சாத்தான்குளம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சாத்தான்குளம் அருகே மேல பனைகுளம் கிராமத்தை சேர்ந்த முதியவர் டேவிட் என்பவர் அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியிடம் தவறான எண்ணத்தில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சம் அடைந்த சிறுமி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய், சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து டேவிட்டை கைது செய்தனர்.




