
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.
டெல்லியில் 19 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில், டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் தலைமையிலான வீரர்களும், பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், கடந்த தொடரின்போது பெங்களூரூரில் நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அதனால், இன்றையப் போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்று பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது..



